வன்னியில் பெருமளவில் ராணுவம் குவிப்பு- விடுதலைப் புலிகளை தேடுகின்றனர்

ராணுவத்தின் 28வது பட்டாலியன் இதில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வன்னிப் பகுதியின் பாதுகாப்புகளை பலப்படுத்துவதில் இலங்கை ராணுவம் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் படைத் தலைமையகங்களை நிறுவியுள்ள இலங்கை அரசு மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, மேஜர் ஜெனரல் சானா குணதிலக ஆகியோரை அதிகாரிகளாக நியமித்துள்ளது.
மேலும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அடிக்கடி வன்னிப் பகுதிக்கு பயணங்களை மேற்கொண்டு வருவதுடன், படையினரின் நிலைகளையும் பலப்படுத்தி வருகின்றார். வன்னிப் பகுதியில் புதிய படை தளங்களை அமைப்பது தொடர்பாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
வன்னிப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் சிறப்புப் படையினரும், கமாண்டோ படையினரும் மேலும் இரு பட்டாலியன்களும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைசிக் கட்ட போர் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 28வது பட்டாலியன் படையினர் விடுதலைப் புலிகளின் எஞ்சியுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
53, 58வது படை பிரிவினரும், மேலும் இரு படைப் பிரிவுகளைக் கொண்ட அணிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்கிறது அந்த செய்தி.
இதற்கிடையே, விஸ்வமடு, இரணமடு, புதுக்குடியிருப்பு, பம்பை மடு ஆகிய பகுதிகளில் பெருமளவிலான ஆயுதங்களை ராணுவம் கண்டுபிடித்து மீட்டுள்ளதாம்.
500 ரவுண்டு பலகுழல் இயந்திரத் துப்பாக்கிக்கான தோட்டாக்ள், 33 கையெறி குண்டுகள், ஐந்து கண்ணிவெடிகள், ஐந்து ராக்கெட் மூலம் ஏவப்படும் கிரெனடுகள், ஒரு பூபி டிராப், ஒரு அருள் குண்டு, ஒரு செல்போன், சில ஆடைகளை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிரியமடு என்ற இடத்தில், ஒரு கண்ணிவெடி 140 பென் டார்ச் பேட்டரிகள், 28 பேட்டரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications