பிரான்ஸ் விமான விபத்து: 2 உடல்கள் கிடைத்துள்ளது - பிரேசில்
ரியோ டி ஜெனிரோ: 228 பேருடன் காணாமல் போன பிரான்ஸ் விமானம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. விபத்து நடந்த கடல் பகுதியில் இருந்து 2 ஆண்களின் உடல் மற்றும் சூட்கேஸ் ஆகியவற்றை மீட்டு இருப்பதாக பிரேசில் தெரிவித்துள்ளது.
பிரேசிலில் இருந்து பாரிசுக்கு சுமார் 216 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் சென்ற விமானம் கடந்த வாரம் அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த சமயத்தில் காணாமல் போனது.
இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாடுகளின் போர் விமானங்கள் படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன.
இதுவரை அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. எல்லாம் சிதம்பர ரகசியமாக இருக்கிறது. முதலில் மோசமான வானிலை காரணமாக அது மின்னல் தாக்கி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் திசைகாட்டும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என கூறப்பட்டது.
வேகம் காட்டும் கருவியை விமானிகள் தவறாக கையாண்டிருக்கலாம். அதனால் அதிவேகத்தில் சென்று விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. அனைத்தும் யூகங்களாக தான் இருக்கின்றன. உண்மையான காரணம் கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக கடலில் விமானத்தின் இருக்கை கிடப்பதாக கூறப்பட்டது. பின்னர் அது அந்த விமானத்தின் இருக்கை அல்ல என்பதை பிரேசில் உறுதி செய்தது.
தற்போது விபத்து நடந்ததாக கருதப்படும் பகுதியில் பிரேசில் விமானப்படை மீட்புகுழவினர் இரண்டு ஆண் சடலங்களை கண்டு எடுத்துள்ளனர். இது குறித்து பிரேசில் விமான படையின் செய்தி தொடர்பாளர் கர்னல் ஜார்ஜ் அமரல் கூறுகையில், அந்த உடல்களுக்கு அருகில் ஒரு சூட்கேஸ், விமான டிக்கெட், லேப்-டாப் அடங்கிய பை ஆகியவை கிடைத்துள்ளன.
பெர்னாண்டோ டி நொரங்கா தீவில் இருந்து சுமார் 900 கிலோ மீட்டர் வடகிழக்கே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
தீவிரவாத தாக்குதல்...
இந் நிலையில் விமானத்தை தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் எனவும் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் காணாமல் போன சமயத்தில் அப்பகுதியாக வந்த மற்றொரு விமானத்தின் விமானி வானத்தில் ஒரு விமானம் வெடித்து சிதறுவதை பார்த்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து விமானம் வெடிகுண்டு போன்றவற்றால் வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதை பென்டகன், பிரான்ஸ் மற்றும் பிரேசில் மறுத்து விட்டன.
இது குறித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்சனர் கூறுகையில், தீவிரவாதம் காரணம் என்பதை ஏற்க முடியாது என்றார்.
அமெரிக்கா உதவும்-ஒபாமா...
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்த விபத்து தொடர்பாக தேடும் பணியில் அமெரிக்கா உதவும் என பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியிடம் தெரிவித்துள்ளார். விமானம் காணாமல் போன அட்லாண்டிக் கடல் பகுதியின் ஆழம் சுமார் 15 ஆயிரம் அடிக்கு மேல் இருப்பதால் பிரான்ஸ் தேடுதல் வேட்டைக்கு நீர் மூழ்கி கப்பலை பயன்படுத்த இருக்கிறது.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications