For Daily Alerts
Just In
துணை சபாநாயகராக இன்று கரிய முண்டா தேர்வு
டெல்லி: லோக்சபா துணை சபாநாயகராக பாஜகவின் கரிய முண்டா இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.
லோக்சபா சபாநாயகராக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மீரா குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து துணை சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தந்தது காங்கிரஸ்.
அக்கட்சி சார்பில் கரிய முண்டா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
முண்டாவுக்காக பாஜக சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் இரு மனுக்கள் முன்மொழிந்து, வழி மொழியப்பட்டுள்ளன.
இன்று கரிய முண்டா போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று முறைப்படி வெளியிடப்படும்.
Comments
Story first published: Monday, June 8, 2009, 10:48 [IST]