பிறந்த நாள் கலை நிகழ்ச்சிகள் - ரசித்துப் பார்த்தார் கருணாநிதி
சென்னை: தனது 86வது பிறந்த நாளையொட்டி திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளை முதல்வர் கருணாநிதி பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.
கலைவாணர் அரங்கில் நடந்த இந்த கலை நிகழ்ச்சிகளுக்கு திமுகவின் ஆதி திராவிட நலக்குழு, விவசாய அணி, மீனவர் அணி ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.
கலைஞர் போற்றுதும்... கலைஞர் போற்றுதும்...
கலைஞர் போற்றுதும்... கலைஞர் போற்றுதும் என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சிளை சுமார் ஒரு மணஇ நேரம் முதல்வர் கருணாநிதி அமர்ந்து பார்த்து, ரசித்து, மகிழ்ந்தார்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்துகொண்டார். அமைச்சர்கள், தி.மு.க. மகளிர் அணி புரவலர் இந்திர குமாரி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முதலில் தப்பாட்டம்...
திண்டுக்கல் எஸ்.பி.மணி குழுவினரின் தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
படவா கோபி காமெடி...
நிகழ்ச்சியின் இடை இடையே படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாட மயிலாட...
பின்னர் முக்கிய நிகழ்ச்சியாக பராசக்தி படத்தின் ரீ-மிக்ஸ் பாடல்களுக்கு கலைஞர் டிவியின் மானாட மயிலாட குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியாக, மானாட மயிலாட குழுவினர் ஏற்பாடு செய்து இருந்த கருணாநிதியின் 86-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு, பிறந்தநாள் கேக்' வெட்டினார்.
தொகுத்து வழங்கிய மனோரமா...
நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் கவியின் இசையில் பாடப்பட்ட பராசக்தி பாடல் சி.டி. வெளியிடப்பட்டது. சி.டி.யை மு.க.ஸ்டாலின் வெளியிட, ஏ.வி.எம்.சரவணன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நேற்றைய நிகழ்ச்சிகளை நடிகை மனோரமா தொகுத்து வழங்கினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications