தீவிரவாத அச்சுறுத்தல்-சென்னையை கண்காணிக்க கேமராக்கள்!

இதன் மூலம் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
சமீபத்தில் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக ஐபி எச்சரித்தது. இதை உறுதி செய்வது போல டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி மத்னியும், சென்னையில் படித்த வேலையில்லாத இளைஞர்களைத் தேர்வு செய்து தீவிரவாத பயிற்சி அளிக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
சென்னை முழுவதும் 75 இடங்களில் ஸ்பை கேம் எனப்படும் ரகசிய கண்காணி்பு காமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து கண்டுபிடிக்க முடியும்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாகவே தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக எஙகளுக்கு அவ்வப்போது தகவல்கள் வருகின்றன. இதையடுத்து ரகசியக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த கேமராக்கள் அனைத்தும் வணிக வளாகங்கள், ரயில்வே நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், ரோந்து வாகனங்கள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட இடங்களில் நிறுவப்படவுள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தார் கூறுகையில், தற்போது 35 கண்காணிப்பு கேமராக்கள் நகரில் உள்ளன. இவை போக்குவரத்து விதி மீறலைக் கண்காணிக்க நிறுவப்பட்டவையாகும். தற்போது இவை பாதுகாப்பு கண்காணிப்புக்கும் பயன்படுத்தப்படும் என்றார்.
இன்னும் சில வாரங்களில் சென்னை அருகே என்.எஸ்.ஜி,. முகாம் அமையவுள்ளது. இதன் மூலம் சென்னை நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications