ஈழத் தமிழர்களுக்கு இந்தியா துரோகம்-லோக்சபாவில் திருமா

முதல் முறையாக லோக்சபா உறுப்பினராகியுள்ள திருமாவளவன், லோக்சபாவில் தனது கன்னிப் பேச்சைப் பதிவு செய்தார்.
திருமா பேசுகையில், தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களை மக்களவையின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பாராட்டுகிறேன். இக்கால கட்டத்தை எளியோரின் காலம் என கூற விரும்புகிறேன்.
குடியரசுத் தலைவர் உரையில் பெண் கல்விக்கான தேசிய இயக்கம், அடையாள அட்டை வழங்கும் திட்டம், குப்பம் இல்லா இந்தியா, தேசிய அளவிலான உணவு உறுதிச்சட்டம், சிறுபான்மை யினருக்கான பிரதமரின் 15 அம்சத்திட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா போன்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியவை.
ஆனால், ஜனாதிபதியின் உரையில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை பற்றியும், சேது சமுத்திரத் திட்டம், தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கை தமிழர் மீதான இனப் படுகொலை பற்றி இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இலங்கைத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் பங்களிப்பு என்ன? இலங்கை அரசுக்கு இந்திய அரசு என்ன வகையான ஆதரவினைத் தந்தது? என இந்திய அரசு வெள்ளை அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
எனது கட்சியும், தோழமைக் கட்சியான திமுகவும், ஈழத் தமிழர்கள் சிக்கல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளன. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக் கொண்டு தமிழ்ச் சொந்தங்களை பாதுகாக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications