கொச்சியில் லட்சக்கணக்கில் மோசடி-சென்னையில் இருவர் கைது
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் பல லட்சம் பேரிடம் பணத்தை வசூலித்து விட்டு தலைமறைவான தமிழகத்தைச் சேர்ந்த இருவரை கொச்சி போலீஸார், சென்னையில் வைத்துக் கைது செய்தனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் முகம்மது ஜாகிர். சென்னையைச் சேர்ந்தவர் இன்பராஜ். இருவரும் கொச்சியில், ரவிபுரம் என்ற இடத்தில் ஒரு அலுவலகம் திறந்தனர்.
கொச்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர்களை அணுகி, உங்களுக்கு கமிஷன் அடிப்படையில் பெருமளவில் வங்கிகளிலிருந்து லோன் வாங்கித் தருகிறோம் என்று கூறி பெரும் பணத்தைக் கமிஷனாக பெற்றுள்ளனர்.
ஆனால் சொன்னபடி யாருக்கும் லோன் வாங்கித் தரவில்லை. பல லட்சம் பணம் சேர்ந்ததும் ரவிபுரம் அலுவலகத்தை மூடி விட்டு சென்னைக்குத் தப்பி விட்டனர்.
இதையடுத்து போலீஸார் ரவிபுரம் அலுவலகத்தை உடைத்து சோதனை செய்து பார்த்தனர். அங்கு ஏராளமான போலி செக்குகள் இருந்தன.
இதையடுத்து இருவரையும் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. அதில் இருவரும் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் சென்னை வந்தனர். சென்னை போலீஸாருடன் இணைந்து இருவரையும் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்து கொச்சி கொண்டு சென்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications