துப்பாக்கி-சென்னையில் 2 ஒரிசா வாலிபர்கள் கைது
கொச்சி: சென்னையில் போலி லைசென்ஸ் மூலம் வாங்கிய துப்பாக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 துப்பாக்கி மற்றும் பல போலி லைசென்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு துப்பாக்கி விற்பனை நிறுவனத்தில் ஒரு கும்பல் போலி லைசென்சுடன் அடிக்கடி வந்து துப்பாக்கி வாங்கி செல்வதாக எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த கும்பல் மீண்டும் அந்த நிறுவனத்துக்கு கடந்த 30ம் தேதி துப்பாக்கி வாங்க வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் மாறுவேஷத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மூன்று பேர் போலி லைசென்ஸ் மற்றும் அனுமதி சீட்டு ஆகியவற்றை கொடுத்து துப்பாக்கிகள் வாங்க வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்கள் வைத்திருந்த போலி லைசென்ஸ் மற்றும் பல ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மூவரும் ஒரிசாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களது பெயர் ரதிராஜன் பரிதா, பிபின் பிகாரி பெக்ரா மற்றும் பிரன்ஜி நாரயண் பெக்ரா என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து எர்ணகுளம் உதவி கமிஷ்னர் பிஎம் வர்கீஸ் கூறுகையில், இந்த கும்பல் கடந்த ஓராண்டுக்குள் 24 துப்பாக்கி மற்றும் 100 தோட்டாக்களுக்கு மேல் வாங்கி கடத்தியுள்ளனர். அவர்கள் ஒரிசாவில் இருக்கும் நக்சலைட் கும்பளுக்காக துப்பாக்கி கடத்தியிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம் என்றார்.
இதை தொடர்ந்து அந்த கும்பலிடம் மத்திய மற்றும் மாநில போலீசார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் தற்போது ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் விசாரணையில் சென்னையில் இருவர் இருப்பதாக தெரிவித்தனர். இதையடு்தது கொச்சி போலீசாரி சென்னை வைத்து தேடுதல் வேட்டையில் இறங்கி, அங்கு பதுங்கியிருந்த ஐயந்த்குமார் ராவத் (23), ரபீந்திர குமார் மாஜி (24) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து மூன்று துப்பாக்கிகளும், பல போலி லைசென்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications