இனி மொபைலில் பென்சன் விபரம்!
நெல்லை: தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் எஸ்எம்எஸ் முலம் மாதந்திர ஓய்வூதிய விபரங்களை சம்பந்தப்பட்ட ஓய்வூதியர்களுக்கு அளிக்கும் புதிய வசதியினை கலெக்டர் ஜெயராமன் துவக்கி வைத்தார்.
மாநில அரசு ஓய்வூதியர்கள், மாதந்தோறும் கருவூலத்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதியம் கருவூலத்துறை முலம் ஓய்வூதியரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
தங்கள் மாதந்திர ஓய்வூதிய தொகை, வங்கியில் வரவு வைக்கப்பட்ட தேதி குறித்த விவரங்களை மொபைல் முலம் எளியமுறையில் அறிந்து கொள்ளும் வசதி தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் நேற்று துவக்கப்பட்டது.
மத்திய அரசு சார்ந்த நெல்லை மாவட்ட தேசிய தகவலியல் மையம், மாவட்ட கருவூலத்துறை இணைந்து ஓய்வூதியர் நலன்
கருதி இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்.
ஓய்வூதியர்கள் தங்கள் மொபைல் எண்ணை தேசிய தகவலியல் மையத்தில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்து வைத்து கொள்ளலாம்.
இதற்கு அவர்கள் தங்களது மொபைலில் இருந்து regPPONOCell phone no என டைப் செய்து 9500204060 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அவர்கள் அளித்த மொபைல் எண் ஓய்வூதிய எண்ணில் பதிவு செய்யப்படும்.
இப்படி பதிவு செய்யப்படும் எண்ணுக்கு அவ்வப்போது மாவட்ட கருவூலத்தில் இருந்து தேவைப்படும் தகவல்கள் அனுப்பப்படும்.
தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையில் ஓய்வூதிய விபரங்களை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் புதிய வசதியை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் துவக்கி வைத்தார். மாவட்ட தேசிய தகவலியல் மைய தொழில்நுட்ப இயக்குனர் தேவராஜன், முதுநிலை பகுப்பாய்வாளர் ஆறுமுகநயிணார்,கருவூல அலுவலர் முத்தையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications