திருப்பரங்குன்றம் மலையிலிருந்து விழுந்து 2 நாட்களாக புல்லைத் தின்று மீண்டவர்!
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குன்றிலிருந்து விழுந்த இளைஞர், தப்பிக்க வழி இல்லாமல், 2 நாட்களாக புல்லையும், இலைகளையும் சாப்பிட்டு பத்திரமாக மீண்டு வந்துள்ளார்.
சிவகங்கையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 30 வயதாகும் இவர் திருப்பரங்குன்றத்தி்ல் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.
சனிக்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு திருப்பரங்குன்றம் மலையில் ஏறினார். மலைப் பகுதியில் உள்ள முஸ்லீம் தர்கா, காசி விஸ்வநாதர் கோவிலைச் சுற்றிப் பார்த்தார். பின்னர் கீழே இறங்கினார்.
அப்போது திடீரென கால் தடுமாறி 200 அடி பள்ளத்தில் விழுந்து விட்டார்.
அதிர்ஷ்டவசமாக கை, கால்களில் முறிவோடு உயிர் தப்பினார். ஆனால் அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தவித்தார். உதவி கேட்டு குரல் எழுப்பியும் அது பலன் அற்றுப் போனது.
கை, கால்களில் ஏற்பட்ட காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தோடு, அங்கியே 2 நாட்களாக கிடந்தார் செந்தில்குமார். பசியைப் போக்க அங்கிருந்த இலைகளையும், புல்லையும் பறித்து சாப்பிட்டுள்ளார்.
முனகியபடி கிடந்த அவரது குரல், தர்காவுக்கு வந்த சிலரது காதுகளுக்கு எட்டியது. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து செந்தில்குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications