ராகுலிடம் உதவி நாடி வந்த கலாவதியை திருப்பிய அனுப்பிய காங். நிர்வாகிகள்

லோக்சபாவில் கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தின்போது ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது.
உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த தலித் விதவைப் பெண்ணான கலாவதி குறித்து அவர் குறிப்பிட்டுப் பேசியது அனைவரையும் ஈர்த்தது, பலத்த கரகோஷத்தையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பெரும் பலத்தைப் பெற்றுத் தந்தது ராகுலின் கலாவதி பேச்சு.
கலாவதி, உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த தலித் பெண். இவரது கணவர் ஒரு விவசாயி. இவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 9 குழந்தைகள் உள்ளன.
2008ம் ஆண்டு ராகுல் காந்தி கலாவதியின் கிராமத்திற்குப் பயணம் மேற்கொண்டார். கலாவதியின் குடிசையில் தங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது கதையைக் கேட்டு கண் கலங்கினார்.
கிராமத்தில் சுகாதார வசதி இல்லாமல் இருப்பதையும், கலாவதிக்கு சொந்தமாக வீடு கூட இல்லாத நிலை இருப்பதையும் தெரிந்து கொண்டார். இதைத்தான் தனது லோக்சபா பேச்சின்போது அனல் பறக்கக் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியால் கலாவதியின் பெயர் நாடு முழுக்க பிரபலமானாலும் கூட அவரது வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. அதே போலத்தான் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அவரது ஊர் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ராகுல் காந்தியை சந்தித்து உதவி கேள் என்று கூறவே டெல்லிக்கு புறப்பட்டு வந்தார் கலாவதி.
நேற்று ராகுல் காந்தியை சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால் ராகுல் பிசியாக இருப்பதாக கூறி அனுமதி தர முடியாது என்று அவரது அலுவலக நிர்வாகிகள் கூறி விட்டனராம்.
இதுகுறித்து கலாவதி கூறுகையில், எனக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும், அமையும் என ராகுல் காந்தி உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவருக்கு நினைவூட்டவே டெல்லிக்கு வந்தேன்.
இன்னும் எனது கிராமத்தில் அதே நிலைதான் தொடருகிறது. எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என்றார் சோகத்துடன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தனது தேர்தல் பிரசாரத்தின்போது புதிய இந்தியாவை கட்டி எழுப்புவோம் என்ற கோஷத்தை பெரிதாக முழங்கியது. இப்போது அதை கலாவதிக்கு புது வீடு கட்டிக் கொடுத்து அவருக்குப் புது வாழ்க்கை கொடுப்பதன் மூலம் அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடங்கலாம்.
-
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications