வவுனியா ராணுவ முகாமில் பெரும் தீ-ஆயுதங்கள் வெடித்து சிதறின
Subscribe to Oneindia Tamil

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் இந்த பெரும் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயில் சிக்கி ஆயுதங்கள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த சத்தத்தை அருகில் உள்ள ஈரப்பெரியகுளம் பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு ஆயுதங்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
இந்த ராணுவ கிட்டங்கி, இலங்கை ராணுவத்தின் மிகப் பெரிய கிட்டங்களில் ஒன்றாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று யாழ்ப்பாணம், மயிலிடி என்ற இடத்தில் உள்ள ராணுவ படைத் தலையமைகத்திலும் இதேபோன்ற வெடிவிபத்து ஏற்பட்ட ஏராளமான ஆயுதங்கள் நாசமாகின என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications