2 டிஐஜிக்கள் உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் இரண்டு டிஐஜிக்கள் உள்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை முதன்மைச்செயலாளர் எஸ்.மாலதி நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:
- மாநில போக்குவரத்துத்துறை திட்டமிடல் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. எஸ்.கே.டோக்ரா, சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
- சென்னை ஐ.ஜி (பயிற்சி) டி.ராதாகிருஷ்ணன், மாநில போக்குவரத்துத்துறை திட்டமிடல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் ஏ.அலெக்ஸாண்டர் மோகன், சென்னையில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
- சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி. பிரதீப் வி.பிலிப், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக மாற்றப்பட்டு உள்ளார்.
- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றும் சீமா அகர்வால், போலீஸ் நலப்பிரிவு (சென்னை) ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
- ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் சந்தீப் மிட்டல், திருச்சி ஆயுதப்படை போலீஸ் டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
- திருச்சி ஆயுதப்படை போலீஸ் டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு இருக்கிறார்.
- மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருக்கும் சந்தீப்ராய் ரத்தோர், சென்னை ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- திருச்சி சரக டி.ஐ.ஜி. பி.பாலசுப்பிரமணியன், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications