சாமியுடன் இணைந்து செயல்பட பாஜக முடிவு!
சென்னை: தேர்தல் எல்லாம் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு புதுக் கூட்டணி உருவாகியுள்ளது. பாஜகவும், சுப்ரமணியம் சாமியின் ஜனதாக் கட்சியும் இணைந்து செயல்படப் போகிறதாம்.
இன்று சென்னையில் பாஜக தலைவர் இல.கணேசனும், சாமியும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது கணேசன் கூறுகையில், விடுதலைப்புலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் மீண்டும் வசித்த பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும். மத்திய அரசே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையை பெற்றுத்தர வேண்டும். இலங்கை தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தவும், புத்த மடாலயங்களை எழுப்பவும் சிங்கள அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுவதை கண்டிக்கிறோம்.
தமிழர்கள் அந்த பகுதிகளில் குடியமர்த்தப்பட வேண்டும். இதை பிஜேபியை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கை சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று அத்வானியிடம் கூறவிருக்கிறோம்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறு செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்க வேண்டும்.
சித்தாந்த ரீதியாக ஒரே கொள்கைகளை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து தமிழகம் எப்போதும் தேசியத்தின் பக்கம்தான் உள்ளது என்பதை நிருபித்து காட்டுவதற்காக பிஜேபியும், ஜனதா கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
தேசிய தன்மை நல்லாட்சி, இந்துத்துவா, பொருளாதார வளர்ச்சி, தேச பாதுகாப்பு போன்ற விஷயங்களில் ஒருமித்த கருத்துகொண்ட பிஜேபியும், ஜனதா கட்சியும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொள்கைகளை கொண்ட சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இரு கட்சிகளும் ஈடுபடும்.
இப்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, ஒற்றுமைக்காக இந்து மதத்தில் மறுமலர்ச்சி கொண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டணியில் வேறு சில கட்சிகள் வந்தால் அவற்றை வரவேற்போம் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications