பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
சேலம்: சேலம் பி.எஸ். என். எல் பொது மேலாளர் சேது மாதவனை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சேலம் பி.எஸ். என். எல் அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் சேது மாதவன் தன்னிச்சையாக ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேவையற்ற பணி இடம் மாறுதல் வழங்கி வருவதாக ஊழியர்கள் மத்தியில் குற்றம் சாட்டப்படுகின்றது.
இதைக் கண்டித்து சேலம் பி.எஸ். என். எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இன்று ஊழியர்கள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்துக்கு மாநில செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநில தலைவர் பழனிசாமி மற்றும் மாநில உதவி செயலாளர் நீதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகி்கள் பொது மேலாளரின் அணுகுமுறை குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் 18 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 500 -க்கும் மேற்படோடார் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications