ஏர் பிரான்ஸ் விமான விபத்து - இதுவரை 41 உடல்கள் மீட்பு
ரியோ டி ஜெனீரோ/பாரீஸ்: ஏர் பிரான்ஸ் விமானம் விபத்துக்குள்ளான அட்லான்டிக் கடல் பகுதியிலிருந்து மேலும் 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரியோ டி ஜெனீரோ நகரிலிருந்து 228 பேருடன் பாரீஸ் கிளம்பிய ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த வாரம் அட்லான்டிக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென மாயமானது.
இதையடுத்து தீவிர தேடுதல் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் அட்லான்டிக் கடல் பகுதியில் விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக் கப்பல்கள் பயணிகளின் உடல்களை மீட்டு வருகின்றன. விமான பாகங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கருப்புப் பெட்டியைத் தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுவரை அந்த இடத்திலிருந்து 41 உடல்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளன.
அட்லான்டிக் கடல் பகுதியில் அடிக்கடி புயல் வீசி வருவதாலும், கால நிலை மோசமாக இருப்பதாலும் மீட்புப் பணிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
இருப்பினும் பிரேசில் ராணுவம், கடற்படை ஆகியவை தொடர்ந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மீட்கப்பட்ட உடல்கள் விபத்து நடந்த கடல் பகுதிக்கு அருகில் உள்ள பெர்னான்டோ டி நொரோன்ஹா பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து அவை பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மீட்கப்பட்டு வரும் உடல்களை பிரான்ஸ் மற்றும் பிரேசில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து பயணிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே செனகல் நாட்டின் எல்லைப் பகுதிக்குள் வரும் செயின்ட் பால், செயின்ட் பீட்டர் ராக்ஸ் ஆகிய திட்டுப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டையை நடத்த பிரேசில் முடிவு செய்துள்ளது.
இதற்காக அப்பகுதியில் தங்களது விமானப்படை மற்றும் கப்பல் படையை அனுமதிக்குமாறு அது செனகலுக்கு கோரிக்கை விடுத்தது. அதை செனகலும் ஏற்றுக் கொண்டது.
நீரோட்டத்தின் காரணமாக இப்பகுதிக்கு உடல்களும், விமான பாகங்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பிரேசில் சந்தேகிக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications