அழகிரி-ஸ்டாலின் மீண்டும் மோதல்?
மதுரை: திமுகவில் சகோதரர்களான மத்திய அமைச்சர் அழகிரி-துணை முதல்வர் ஸ்டாலின் இடையே மீண்டும் மோதல் மூண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுகவில் ஸ்டாலின், அழகிரி மோதல் மிகப் பிரபலமானது. ஆனாலும் முதல்வர் கருணாநிதி தனது சாதுரியத்தால் இருவரையும் சமாதானப்படுத்தி அவரவருக்கு ஒரு பொறுப்பை கொடுத்து சரிக்கட்டியுள்ளார்.
ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டுள்ளார். அழகிரி மத்திய கேபினட் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் யார் யார் எந்தெந்தப் பாதையில் போக வேண்டும் என்பதை முதல்வர் தெளிவாக கூறி விட்டதாக திமுக தரப்பில் கருதுகிறார்கள்.
இந் நிலையில் சமீப காலமாக இல்லாமல் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் ஸ்டாலின், அழகிரிக்கு இடையே மீண்டும் தலை தூக்கியிருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் மதுரைக்கு வந்தார். அவரை வரவேற்க அழகிரியோ அல்லது அவரது ஆதரவாளர்களோ போகவில்லை.
அதேபோல ஸ்டாலினும் மதுரை நகருக்குள் வராமல், விமான நிலையத்திலிருந்து ரிங் ரோடு வழியாக ராமநாதபுரம் புறப்பட்டுப் போய் விட்டார்.
ஸ்டாலினை அழகிரி வரவேற்கப் போகாததற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. மதுரையில் வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஜூன் 8ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 11ம் தேதி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் 10ம் தேதியே நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இதை நம்பி மதுரை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இந்தத் திட்டத்தை தனது தேர்தல் வாக்குறுதியின்போது வலியுறுத்தி வந்தார் அழகிரி.
மேலும் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கப் போவதாகவும், அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் திடீர் திருப்பமாக இந்த விழா ரத்து செய்யப்பட்டது. காரணம், மு.க.ஸ்டாலின் இதற்கு தேதி கொடுக்கவில்லை என்று அழகிரி தரப்பில் முனுமுனுக்கப்படுகிறது. இதனால்தான் அழகிரி அப்செட் ஆகி விட்டதாகத் தெரிகிறது.
மதுரை விழா ரத்தான நிலையில், ராமநாதபுரத்தில் நடைபெறும் விழாவுக்கு ஸ்டாலின் வந்ததால் கோபத்தில் அவரை வரவேற்க அழகிரி போகவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ராமநாதபுரம் விழாவில் அழகிரிக்கு முக்கியத்துவம் இல்லாதது போல விளம்பரங்களும், அழைப்புகளும் இருந்தாதலும் அழகிரி கோபமாக இருப்பதாக தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications