சென்னையைச் சேர்ந்த அணு விஞ்ஞானி மாயம்

சென்னை அண்ணா நகரைச்சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கர்நாடக மாநிலம் தார்வார் அருகில் உள்ள கெய்கா அணு மின் நிலையத்தில் அணு சக்தி விஞ்ஞானியாக பணி புரிந்து வந்தார். அங்குள்ள குடியிருப்பில் மனைவி விநாயகசுந்தரியுடன் வசித்து வந்தார்.
தினமும் காலையில் மகாலிங்கம் வாக்கிங் செல்வார். கடந்த திங்கள்கிழமையும் அவர் வழக்கம் போல வாக்கிங் போயிருந்தார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி விநாயக சுந்தரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
விஞ்ஞானி மகாலிங்கம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. யாரேனும் அவரை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மகாலிங்கம் குறித்து அவரது மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, எனது கணவர் மிகவும் அமைதியானவர். யாருடனும் பிரச்சினை செய்ய மாட்டார். குடும்பத்திலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
யாரிடமிருந்தும் இதுவரை அவருக்கு மிரட்டல் எதுவும் வந்ததில்லை என்று கூறியுள்ளார்.
மகாலிங்கம் முக்கியமான பொறுப்பில் இருந்து வந்த அணு சக்தி விஞ்ஞானி என்பதால் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாலிங்கம் வசித்து வந்த குடியிருப்புக்கு அருகில் அடர்ந்த காடுகள் உள்ளன. கிட்டத்தட்ட 1000 ஏக்கர் பரப்பளவிலான இந்தக் காட்டுக்குள் சிறுத்தைகள் உள்ளன.
இந்த காட்டுப் பகுதியில், தேடுதல் வேட்டை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அங்கு பருவ மழை பெய்து வருவதால் காட்டுக்குள் செல்ல முடியாத நிலை. எனவே நிதானித்துச் செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications