மத்திய அரசு அலுவலகங்களில் ரெய்ட்-ரூ. 2.25 கோடி சிக்கியது
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ நடத்திய அதிரடி சோதைனையில் கணக்கில் வராத ரூ. 2.25 கோடி மதிப்பு கொண்ட சொத்து பத்திரங்கள் சிக்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதாக சிபிஐ போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர்கள் சென்னை, சிவகாசி, புதுச்சேரி இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மத்திய அரசு அலுவலகங்களான வருமான வரித்துறை, தபால்துறை மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டலம் உள்ளிட்ட 15 இடங்களில் அவர்கள் சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ. 2.25 கோடி சொத்துக்களை சிபிஐ போலீசார் கண்டுபிடித்தனர். சிலர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர். சிலர் மீது வருமானத்துக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் வழக்கு தொடரப்ப்டடது.
புதுச்சேரியில் போலீஸ் வீட்டில் சோதனை...
புதுச்சேரியில் போலீசாருக்கு ஹெல்மேட் வழங்குவதில் முறைகேடு இருப்பதாக புகார் வந்ததையடுத்து காவல்துறை தலைமையக எஸ்பி ராமச்சந்திரன் வீட்டில் சிபிஐ போலீசார் சோதனையிட்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
பின்னர் அவர்கள் காவல்துறை தலைமையகத்தில் வேலை பார்த்து வரும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications