ஆஸி-இந்தியர்களை தொடர்ந்து இலங்கை மாணவர்களுக்கு அடி

சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியர்களை தாக்கிய சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத், இந்திய மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நேற்று வடக்கு கான்பெரா பகுதியில் வசித்து வந்து இலங்கை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று இலங்கை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று ஜன்னலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. அவர்களை நோக்கி இனவெறியை தூண்டும் வகையில் கூச்சலிட்டது.
பின்னர் அங்கிருந்த கார் கண்ணாடியையும் உடைத்துவிட்டு ஓடிவிட்டது.
இது குறித்து இலங்கை மாணவர் விஜேசூர்யா கூறுகையில், சிட்னி மற்றும் மெல்போர்னில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து இங்கே வாழ்வதற்கே பயமாக இருக்கிறது. நாங்கள் வெளியில் எங்கும் போவதில்லை. கல்லூரிக்கு சென்றுவிட்டு நோராக வீட்டுக்குள் வந்து முடங்கி கிடக்கிறோம்.
நேற்று எங்கள் வீடுகளை தாக்கியவன் கையில் கத்தி வைத்திருந்தான். எங்கள் பகுதியை விட்டு வெளியேறு என எச்சரித்துவிட்டு சென்றான் என்றார்.
இதை தொடர்ந்து இதுவரை சிட்னி மற்றும் மெல்போர்ன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்த இனவெறி தாக்குதல் தற்போது ஆஸ்திரேலிய தலைநகரான கான்பரொவுக்கும் பரவியுள்ளது தெரிய வருகிறது.
இது குறித்து கான்பெரா போலீசார் ஒருவர் கூறுகையில், நாங்கள் பல சம்பவங்களை விசாரித்து வருகிறோம். ஆனால் அவர்கள் இனவெறி காரணமாக தாக்கப்பட்டதாக யாரும் கான்பெராவில் இதுவரை புகார் செய்யவி்ல்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து கான்பெரா ஆஸ்திரேலிய இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் மது கலியா கூறுகையில், இதற்கு முன் கான்பெராவில் எந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை. இதுவரை அமைதியாக தான் இருந்தது என்றார்.
இந்நிலையில் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று இரவு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் லெபானிய இளைஞர்கள் சிலர் இருப்பதாகவும், அவர்கள் தான் இந்த சம்பவங்களை தூண்டிவிடுவதாகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும், தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசார் கண்டுகொள்வதில்லை என்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications