ஏர் பிரான்ஸ் விமான விபத்திலிருந்து தப்பி கார் விபத்தில் பலியான இத்தாலி பெண்
வியன்னா: அட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தை அதிர்ஷ்டவசமாக தவற விட்ட இத்தாலியப் பெண், ஆஸ்திரியாவில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தாலியைச் சேர்ந்தவர் ஜோஹன்னா கான்தாலர். இவரது கணவர் குர்த். இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தம்பதியினர்.
இருவரும் விடுமுறைக்காக பிரேசில் வந்திருந்தனர். பிரேசில் பயணத்தை முடித்து விட்டு ரியோ டிஜெனீரோ நகரிலிருந்து பாரீஸ் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்யவிருந்த விமானம்தான் சமீபத்தில் அட்லான்டிக் கடல் மேல் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 228 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அன்றைய தினம் அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தை தவற விட்டு விட்டது குர்த் ஜோடி.
இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அந்த தம்பதி, பயணத்தை முடித்துக் கொண்டு ஜெர்மனி சென்றது.
அங்கு ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இத்தாலிக்குக் கிளம்பினர். ஆஸ்திரியாவைத் தாண்டித்தான் இத்தாலி செல்ல முடியும்.
ஆஸ்திரியாவின் குஃப்ஸ்டெய்ன் என்ற நகரில் அவர்கள் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி, குர்த் தம்பதி பயணம் செய்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஜோஹன்னா பரிதாபமாக உயிரிழந்தார். குர்த் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
பெரும் விமான விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய ஜோஹன்னா, கார் விபத்தி்ல் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும், இத்தாலியையும் சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications