ரேஷன் கார்டுக்கு அலைக்கழித்த தாசில்தாருக்கு கலெக்டர் எச்சரிக்கை
புளியங்குடி: ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக இரண்டு பெண்களை அலைக்கழித்த சிவகிரி தாசில்தாருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 11 தாலுக்காக்களில் கடந்த 4ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கியது. அதன்படி சிவகிரி தாலுகாவில் 4ம் தேதி, வாசுதேவநல்லூர் தாலுகாவில் 5ம் தேதி, 9ம் தேதி சிவகிரி, 10ம் தேதி கூடலூர் ஆகிய பிர்காக்களில் அடங்கியுள்ள 29 கிராமங்களுக்கு கணக்கு தீர்வாய பணி கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
அப்போது பொதுமக்கள் 890 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் ரேஷன் கார்டு, வாரிசு சான்றிதழ், முதியோர் பென்சன் உள்ளிட்ட மனுக்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டியை சேர்ந்த விஏஒ ராமகிருஷ்ணன் இறந்ததற்கு அவரது மனைவிக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்காமல் காலதாமதப்படுத்தியதற்காக வருவாய் ஆய்வாளர் கண்ணனை கடுமையாக எச்சரித்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணி சிவகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் பட்டா மாறுதல் சான்று, உதவி தொகை சான்றிதழ்கள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது பட்டா மாறுதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்காத தாசில்தார் கோமதி நாயகத்தையும், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 2 பெண்களை அலைகழித்து காலதாமதப்படுத்தியதற்காக குடிமைப் பொருள்கள் வழங்கல் தாசில்தார் ராமரையும் கடுமையாக எச்சரித்தார்.
மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத உங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications