விஞ்ஞானி மகாலிங்கத்தின் உடல்தானா? குடும்பத்தினர் சந்தேகம் - டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு கோரிக்கை
கார்வார்: காளி ஆற்றில் மீட்கப்பட்ட உடல் விஞ்ஞானி மகாலிங்கத்தின் உடல் தானா என்பதில் சந்தேகம் எழுந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனவே இதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி மகாலிங்கம். இவர் சமீபத்தில் காணாமல் போனார். இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில், மகாலிங்கம் தங்கியுள்ள குடியிருப்புக்கு சற்று தொலைவில் ஓடிக் கொண்டிருக்கும் காளி ஆற்றங்கரையோரத்தில் அழுகிய நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது.
அது மகாலிங்கத்தின் உடல்தான் என்று குடும்பத்தினுரம், அவருடன் பணியாற்றியவர்களும் உறுதிப்படுத்தினர். மகாலிங்கத்தின் மோதிரம் உள்ளிட்டவற்றை வைத்து உடல் அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் மகாலிங்கத்தின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்டது மகாலிங்கத்தின் உடல்தானா என்ற சந்தேகத்தை அவரது குடும்பத்தினர் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மகாலிங்கத்தின் சகோதரர் இந்திரஜித் போலீஸில் மனு கொடுத்தார்.
இதையடுத்து மகாலிங்கத்தின் தாயாரிடமிருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது டிஎன்ஏ சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications