தமிழக மீனவர்களை காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்-ஜிகே மணி
கடலூர்: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். இதற்கு கச்சத்தீவை மீட்பது ஒன்று தான் வழி என பாமக மாநில தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் ஜிகே மணி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் பாமக தோற்றது என்பதைவிட ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பது தான் உண்மை. பாமக தோல்வியை கண்டு துவண்டுவிடாது. தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக வேட்பாளர்கள் தேர்தல் செலவை தேர்தல் ஆணையமே நிர்ணயிக்க வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த வேட்பாளரிடம் இருந்து தேர்தல் ஆணையமே பெற்றுக் கொள்ள வேண்டும்
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்பது தான் இதற்கு ஒரேவழி.
தென் மாவட்டங்களில் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரசு பஸ்களில் மீண்டும் கட்டண குறைப்பை அமல்படுத்த வேண்டும். வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் பாமக பொறுப்புள்ள எதிர் கட்சியாக செயல்படும். கூட்டணி கட்சியோடு இணைந்து செயலாற்றுவோம்.
ஆனால் பாமக தனித்தன்மையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காது. அதிமுகவுடன் ஏற்பட்டுள்ள கூட்டணி வரக்கூடிய தேர்தலிலும் தொடரும். தேர்தல் ஒப்பந்தப்படி ஒரு மாநிலங்களவை சீட் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications