தேமுதிகவினால் அதிமுக கூட்டணி தோற்றது-நல்லக்கண்ணு
வத்தராயிருப்பு: மக்களவைத் தேர்தலில் தேமுதிக இல்லாமல் இருந்திருந்தால் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவி்த்துள்ளார்.
வாக்களார்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் வத்தராயிருப்பில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு கலந்து கொண்டு பேசுகையில்,
ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ. 25 லட்சத்துக்கு மேல் செலவழிக்கக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 40 கோடி வரை ஒரு சில கட்சிகள் செலவழித்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்க சென்னையில் ரூ. 27 கோடியும், விருதுநகரில் வைகோவைத் தோற்கடிக்க ரூ. 21 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
பணபலம், அதிகாரப் பலத்தையும் தாண்டித்தான் தென்காசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அதிமுக கூட்டணிக்கு ஒரு கோடியே 15 லட்சம் ஓட்டுகளும், திமுக கூட்டணிக்கு ஒரு கோடியே 31 லட்சம் ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இரு தரப்புக்கும் இடையே 16 லட்சம் ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.
ஆனால், 40 தொகுதிகளிலும் தேமுதிக 31 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளது. அவர் ஏதாவது கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் அந்தக் கட்சியாவது வெற்றி பெற்றிருக்கும்.
தேமுதிக இல்லாமல் இருந்திருந்தால், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும். தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக சோர்ந்து விடமாட்டோம்.
கம்யூனிஸ்ட்கள் இல்லை என்றால், நாட்டில் மக்களைப் பற்றிச் சிந்திக்க நாதியற்ற நிலை தான் ஏற்படும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications