தினமும் மாயமாகும் 30 ஈழத் தமிழர்கள்!
கொழும்பு: இலங்கையில் அகதிகள் முகாம்களில் தினமும் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் மாயமாகிவிடுகின்றனர். ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் இவர்கள் திரும்பவுதில்லை என ஆசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் நடந்த இனப்போரில் ராணுவம் அப்பாவி தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. தற்போது போர் முடிந்த நிலையில் வடக்கு இலங்கையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் அடிப்படை வசதிகள் கூட சரிவர கிடைக்கவில்லை. ஒருவர் தங்க கூடிய இடத்தில் 10க்கும் மேற்பேட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நிலைமை குறித்து பல்வேறு நாட்டை சேர்ந்த அமைப்புகளும் வருத்தம் தெரிவித்து வருகிறது. ஆனால், யாராலும் ஈழத் தமிழர்களின் இதயத்தில் வழியும் ரத்தத்தை துடைக்க முடியவில்லை.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தினர் விடுதலை புலிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்களா என சோதனையிடுகிறேன் என கூறி கொண்டு அங்கிருக்கும் தமிழ் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர்.
முதலை வாயுக்குள் சென்ற ஆடாக விசாரணைக்கு சென்றவர்கள் இதுவரை திரும்பி வந்ததில்லை என முகாம்களில் இருப்பவர்கள் சோகமாக தெரிவித்து வருகின்றனர்.
இதை ஆசிய மனித உரிமை ஆணையமும் உறுதி செய்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
இலங்கை ராணுவம் தினமும் விடுதலை புலிகளுக்கு தொடர்பு உள்ளவர்கள் என கூறி பலரையும் அழைத்து செல்கிறது. ஆனால், அவர்கள் திரும்பி வருவது இல்லை. அவர்கள் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஒரு நாளைக்கு 30க்கம் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் இருந்து காணாமல் போகிறார்கள்.
இதனால் முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இலங்கை அரசு முகாம்களில் இருப்பவர்களை எண்ணி, பதிவு செய்ய வேண்டும். முகாம்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications