தமிழீழ அரசு வெறும் கற்பனையே-இலங்கை அரசு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சிய சிலர் அறிவித்துள்ள நாடு கடந்த தமீழழ அரசு என்பது ஒரு கற்பனையே என்று கூறியுள்ளது இலங்கை அரசு.

இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா கூறுகையில், கற்பனை அதிகமானால் அது பொய்யான மாய உலகில்தான் போய் நம்மை கொண்டு விடும். புலிகளும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கேபி என்று கூறப்படும் செல்வராஜா பத்மநாதனை பிடிக்க அனைத்து வகையிலும் இலங்கை அரசு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதுதொடர்பான கைது வாரண்ட் உத்தரவுகளை நானே நேரில் போய் பல நாடுகளிடம் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். விரைவில் கேபி பிடிபடுவார் என நம்புகிறோம். எங்களது நாட்டின் நீதியின் முன்பு அவர் நிறுத்தப்படுவது உறுதி.

இப்போது அவர்கள் அறிவித்துள்ள நாடு கடந்த தமீழழ அரசும் கூட இலங்கையின் இறையாண்மை மீதான தாக்குதலே ஆகும் என்றார் பொகல்லகாமா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+