மோடி அரசு மசோதா- நிராகரித்தது மத்திய அரசு!
டெல்லி: குஜராத் மாநில அரசு கொண்டு வந்த தீவிரவாத எதிர்ப்பு சட்ட மசோதாவில் 3 திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அதை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்து அனுப்ப முடியும் என மத்திய அரசு கூறி விட்டது.
இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு 2வது முறையாக நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் திட்டமிட்ட குற்றத் தடுப்பு கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு திருத்தங்கள் செய்தால் மட்டுமே ஏற்க முடியும் என கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது குஜராத் அரசு சமர்ப்பித்துள்ள மசோதாவில் - ஒரு குற்றவாளி, போலீஸ் அதிகாரி முன்பு அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை கோர்ட் ஏற்க முடியும் என்ற அம்சம் உள்ளது. இதை ஏற்க முடியாது.
அதேபோல, அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தால் கோர்ட்டால் ஜாமீன் வழங்க முடியாது என்று இன்னொரு அம்சம் உள்ளது. கோர்ட்டுக்குத்தான் ஜாமீன் வழங்குவதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இருக்க வேண்டும். அரசு வக்கீலுக்கு அது இருக்க முடியாது. இதையும் திருத்த வேண்டும்.
அதேபோல இன்னொரு திருத்தத்தையும் நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்த 3 திருத்தங்களையும் குஜராத் அரசு மேற்கொண்டால், இந்த மசோதாவை மத்திய அரசு குடியரசு் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடியும் என்றார் சிதம்பரம்.
இதுகுறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த திருத்தங்களைக் கூறியுள்ளது. இந்த திருத்தங்களுக்குப் பின்னால் அரசியல்தான் உள்ளது. ஏன் தீவிரவாத எதிர்ப்பு விஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications