கக்கன் நூறாவது பிறந்த நாள் - வெறும் 10 பேரே கூடிய கொடுமை!

Subscribe to Oneindia Tamil

Kakkan
சென்னை: அப்பழுக்கற்ற, எளிமையான தூய அரசியல்வாதியாக திகழ்ந்த மறைந்த கக்கனின் நூறாவது பிறந்த நாள் விழாவின்போது கக்கனை அவமதிக்கும் வகையில், வெறும் பத்து பேரே கூடி அஞ்சலி செலுத்தி விட்டுக் கலைந்துள்ளனர் காங்கிரஸ் அலுவலகத்தில்.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி, தேசப் பற்று மிக்க ஒரே கட்சி, நூறாண்டுகள் கடந்த கட்சி என்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாய் கிழியப் பேசுவார்கள்.

கதர்ச் சட்டையுடன் காணப்படும் அவர்கள் தங்களது அரும் பெறும் வரலாற்றுப் பாதையை அப்படியே மறந்து போனவர்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டு உள்ளனர்.

குறிப்பாக சுதந்திரப் போராட்ட தியாகிகளை ஒருபோதும் காங்கிரஸ் கெளரவித்ததில்லை என்பது வரலாறு. மாறாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியின்போதுதான் பல தியாகிகளுக்கு புனர்வாழ்வு கிடைத்தது, உரிய கெளரவம் கிடைத்தது.

சில நாட்களுக்கு முன்பு வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம் வந்தது. காங்கிரஸ்காரர்கள் யாரும் அந்த நாளில் அஞ்சலி செலுத்தியதாக நினைவில்லை.

அதேபோல நேற்று மறைந்த கக்கனின் பிறந்த நாள் நூற்றாண்டின்போதும் அவரை அவமதித்துள்ளது காங்கிரஸ்.

ஒரு போட்டோவை வைத்து வெறும் பத்து பேரே கூடி மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு உடனடியாக அந்த போட்டோவையும் அப்புறப்படுத்தி, கக்கனை அசிங்கப்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு கோஷ்டித் தலைவர்களின் பிறந்த நாளின்போதும் கட்சியே அல்லோகல்லப்படும். ஏன், மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் கோஷ்டித் தலைவர்கள் கட்சித் தலைமையகத்திற்கு வந்தால் ஏதோ போரில் வென்ற மாவீரர்களுக்குக் கொடுக்கப்படுவதைப் போல தடபுடலாக வரவேற்பு அளித்து ஊரையேக் கலக்குவார்கள்.

ஆனால் கக்கன் போன்ற தியாகிகளின் தன்னலமற்ற சேவை அவர்கள் கண்ணுக்குப் படவே படாது.

மறைந்த கக்கனுக்கு நேற்று 100வது பிறந்த நாள். இவர் காமராஜர் அமைச்சரவையில் இருந்தவர். ஊழல் என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கக் கூடியவர். அரசு பேருந்தில்தான் எங்கும் செல்வார். ஒரு பைசா கூட யாரிடமும் பெற மாட்டார். படு எளிமையானவர். லஞ்சம், ஊழல், கரை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர். எல்லாவற்றுக்கும் மேலாக தலித் வகுப்பைச் சேர்ந்த மிக மிக நல்ல மனிதர்.

கக்கன் உயிருடன் இருந்தபோதே அவரை மறந்து போன கட்சி காங்கிரஸ். ஏழ்மையில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் அவர் வாடியபோது எம்.ஜி.ஆர்.தான் உதவிக் கரம் நீட்டினார். கக்கனை உரிய முறையில் பாதுகாத்தார். பின்னர் அவர் மறைந்தவுடன், கக்கனுக்கு மணிமண்டபம் கட்டி திராவிடக் கட்சிகளின் தேசப் பற்றை நிரூபித்தவர் கருணாநிதி.

தேசத்தின் சொத்தாக மதிக்கப்பட வேண்டிய கக்கனின் நூறாவது பிறந்த நாளை எவ்வளவு சிறப்பாக கொண்டாடியிருக்க வேண்டும் காங்கிரஸ்?. ஆனால் வெறும் பத்து பேர் மட்டுமே கூடி மலர் தூவி கலைந்து போயிருக்கின்றனர்.

நேற்று சத்தியமூர்த்தி பவனில் கக்கனின் போட்டோவை வைத்திருந்தனர். அதற்கு தங்கபாலு, சுதர்சனம், கராத்தே தியாகராஜன், தாமோதரன் என வெறும் 10 பேர் மட்டுமே வந்திருந்தனர்.

அதை விட மிகக் கொடுமை - அந்த பத்து பேரும் மலர் தூவி முடித்த பின்னர் போட்டோவை உள்ளே எடுத்துச் சென்று விட்டனர்.

பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த கக்கனின் மகள் கஸ்தூரி சற்று தாமதமாக வந்தார். அவர் வந்தபோது போட்டோவைக் காணவில்லை. இதையடுத்து அலுவலகத்திற்குள் சென்று தனது தந்தையின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார் கஸ்தூரி.

காமராஜர் ஆட்சி, காமராஜர் ஆட்சி என்று வாய் கிழியப் பேசி வருகிறது காங்கிரஸ். ஆனால் காமராஜர் மற்றும் அவருடன் இருந்த கக்கனைப் போன்றவர்களின் சிந்தனை, செயல், குணம் ஆகியவற்றில் ஒரு துளியாவது இப்போதுள்ள தலைவர்களிடம் இருக்க வேண்டும். அப்போதுதான் காமராஜர் போன்றவர்களின் பெயரைச் சொல்லக் கூட அவருக்கு தகுதி உண்டு என்று மூத்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.

மதுரையில் கொண்டாட்டம்

இதற்கிடையே, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கக்கனின் சொந்த ஊரான தும்பைப்பட்டியில், கக்கனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், கக்கன் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சுந்தரம், மாநகர் மாவட்டச்செயலாளர் இரா. அண்ணாதுரை மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதிமுக சார்பில் சட்ட மன்ற உறுப்பினர் சாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் வீர.தமிழ்ச் செல்வன் சிபிஐ புறநகர் மாவட்டச்செயலாளர் காளிதாஸ், மேலூர் தாலுகா செயலாளர் மெய்யர், குமரே சன், தங்கவேல் உள்ளிட்ட தலைவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+