ரயிலில் சீட்கள் மாயம்-டெல்லி டூ நெல்லைக்கு 2 நாள் நின்றபடி வந்த பயணி
நெல்லை: டெல்லியிலிருந்து நெல்லைக்கு வரும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் இருக்கைகள் இல்லாததால், முன்பதிவு செய்த பயணிகள் 2 நாட்களாக நின்றபடி பயணம் செய்து வந்துள்ளனர்.
டெல்லியில் இருந்து குமரிக்கு சனிக்கிழமை தோறும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் மூலக்கரைபட்டி ஆழ்வாநேரி கிராமத்தை சேர்ந்த பாதிரியார் ரத்தினம் மற்றும் மூலக்கரை பட்டி பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் குடும்பத்துடன் மூன்றாம் வகுப்பு பெட்டியில் கடந்த 13ம் தேதி டெல்லியில் இருந்து நெல்லைக்கு பயணம் செய்தனர்.
இது குளிர்சாதன பெட்டி.
ஆறுமுகம், ரத்தினம் இருவருக்கும் ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் நம்பர் 63வது இருக்கை கிடைத்தது. ஆனால் ரயிலில் ஏறிப் பார்த்தால் அந்த எண்ணில் இருக்கையே இல்லை.
இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் ஆறுமுகம் புகார் செய்தார். இதற்கிடையில் 64ம் நம்பர் இருக்கை ஓதுக்கப்பட்ட பயணியும் தனக்கும் சீட் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் டிக்கெட் பரிசோதகர்ம் கடந்த ஒரு மாதமாக இப்படித்தான் இருக்கை இல்லாமல் இயக்கப்படுகிறது என்று அந்நியன் படத்தில் டிடிஆராக வரும் மனோபாலா போல சாவாதானமாக கூறிவிட்டு சென்று விட்டார்.
இதனால் இருக்கை கிடைக்காத பயணிகள் டெல்லியில் இருந்து நெல்லை வரை நின்று கொண்டே 2 நாட்கள் பயணித்தனர்.
பயணிகள் நலனில் அக்கறை செலுத்தும் ரயில்வே நிர்வாகம் இதை போல் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications