இன்டர்போலால் 17 ஆண்டுகள் தேடப்பட்டவர் சென்னையில் கைது

மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த இவரது ஆவணங்களை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இவர் இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளில் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர் சலீம் அப்பாசி தான் என்பதை உறுதி செய்துவிட்டு இன்டர்போலுக்குத் தகவல் தந்தனர்.
பின்னர் அவர் சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இன்ஸ்பெக்டர் முகிலன், சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
ஆனால் போலீசாரிடம் அப்பாசி தந்துள்ள வாக்குமூலத்தில்,
எனது தந்தை மதானி, அல்ஜீரியா நாட்டில் அரசியல் கட்சி தலைவராக உள்ளார். அங்கு ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடினார். கடந்த 1992ம் ஆண்டு போராட்டத்தின் போது குண்டு வெடித்தது. இந்த வழக்கில் எனது தந்தையை சிறையில் அடைத்தனர்.
எங்கள் குடும்பத்தினர் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாங்கள் அங்கிருந்து ஜெர்மனிக்கு சென்றோம். பின்னர் கத்தார் நாட்டில் அடைக்கலம் சேர்ந்தோம்.
நான் தற்போது சோலார் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான நிறுவனம் நடத்தி வருகிறேன். சோலார் மின்சார தயாரிப்பு குறித்து கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கவே வந்தேன். நான் தீவிரவாதியோ, குற்றவாளியோ கிடையாது என்றார்.
ஆனால் இவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்பி சாம்ராஜும் விசாரணை நடத்தி பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவரை 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications