நடத்தையில் சந்தேகம் - சிகரெட்டால் சூடு வைத்து மனைவியைக் கொன்ற கணவர்
கரூர்: நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவி உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்து, கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ளது எம்.புதுப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (29). இவருக்கும் பிச்சமபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் புஷ்பராணிக்கும் (24) ஐந்து மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில காலமாகவே புஷ்பராணியின் நடத்தையில் தங்கவேல் சந்தேகம் கொண்டிருந்தாக கூறப்படுகின்றது. இதனால், அவரை நாள்தோறும் அடித்து, சித்திரவதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் எல்லைமீறி சென்றதால் புஷ்பராணி விஷம் குடித்து தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதையடுத்து அவரது தம்பி சுகுமாருக்கு தங்கவேல் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக, புஷ்பராணி தந்தை சுப்பிரமணியன், சுகுமார் மற்றும் உறவினர்கள் தங்கவேல் வீட்டுக்கு வந்தனர்.
தூக்கில் பிணமாக தொங்கிய புஷ்பராணியின் உடலை கீழே இறக்கி பார்த்த போது, கை, கால், தொண்டை, தொடை, மார்பு பகுதிகளில் சிகரெட் சூடு வைத்து காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து தனது மகளை தங்கவேல் சித்திரவதை செய்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக, புஷ்பராணி தந்தை சுப்பிரமணியன், லாலாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications