சின்னசேலம் அருகே தாசில்தாரை மிரட்டி மர்ம நபர்கள் வழிப்பறி!
சின்னசேலம்: சின்னசேலம் அருகே தாசில்தாரை மிரட்டி வழிப்பறி செய்த நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கும்மிடிப்பூண்டியில் தாசில்தாராக பணியாற்றி வருகின்றார்.
நண்பர்கள் வீரபாண்டியன், பாலாஜி ஆகியோருடன் கோவை சென்று விட்டு காரில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகே காரை நிறுத்தி இருந்தனர்.
அப்போது, அங்கு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாசில்தார் மகாலிங்கம் உள்பட 2 பேரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்த 1 பவுன் மோதிரம், 2500 ரொக்கப்பணம்
ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தாசில்தார் மகாலிங்கம் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications