காட்டி கொடுத்ததால் கைதி கழிவு நீரை குடிக்க வைத்து கொடுமை
நெல்லை: செல்போனில் பேசியதை சிறை அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்த கைதியை, சக கைதிகள், கழிவு நீரைக் குடிக்க வைத்து இழிவுபடுத்தியுள்ளனர்.
பாளை மத்திய சிறையில் நேற்று முன்தினம் கமாண்டோ படையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ரமேஷிடமிருந்து ஒரு செல்போனை பறித்தனர்.
இதையடுத்து செல்லை பறித்த கமண்டோ படையினர் தாக்கப்பட்டனர். இதற்கிடையில் வழிப்பறி வழக்கில் உள்சிறையில் 2ம் பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த கைதி தங்கம் அவ்வப்போது செல்போனில் பேசி வந்தார். இதை சிறை காவலர்கள் கண்டுபிடித்ததை அறிந்த அவர் செல்போனை மணலில் புதைத்து வைத்தார். இதனை காவலர்கள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கைதிகள் தங்கம், மணி, குண்டர் தடுப்பு கைதி மிலிட்டரி குமார், கோபால் உள்ளிட்ட 10 பேர் தாங்கள் உபயோகப்படுத்தி வரும் செல்போனை 7ம் பிளாக்கிலுள்ள குமரி மாவட்டம் புதுக்கடையை சேர்ந்த விசாரணை கைதி ராஜன் என்பவர்தான் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து நேற்று மாலை 18 கைதிகளும் ராஜனின் வாயில் துணியை திணித்து கை, கால்களை கயிற்றினால் கட்டி குண்டு கட்டாக 2ம் எண் பிளாக்கிற்கு தூக்கி வந்து சராமரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரது முகத்தில் தண்ணீரை தெளித்து வாயிலிருந்த துணியை எடுத்து அங்கு கழிவு நீர் ஓடையில் இருந்து மலநீர், மற்றும் சிறுநீரை பிடித்து அவரது வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினர். இதனால் வாந்தி எடுத்து ராஜன் மயங்கினார்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னரே தெரிய வந்த காவலர்கள் ராஜனை மீட்டு நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications