மாவோயிஸ்டுகளுக்கு தடை-தீவிரவாத இயக்கமாக அறிவிப்பு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் பெரும் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். சிபிஐ (மாவோயிஸ்ட்) என்பது இவர்களது அரசியல் பெயராகும். இருப்பினும் இவர்கள் நக்சலைட்டுகளாகவே செயல்பட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் லால்கர் நகரையும் அதைச் சுற்றியுள்ள 50 கிராமங்களையும் மாவோயிஸ்டுகள் பிடித்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துணை ராணுவப்படையினரின் உதவியுடன் சமீபத்தில்தான் மேற்கு வங்க அரசு கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின்னர் லால்கரையும், சில கிராமங்களையும் மீட்க முடிந்தது.
இந்த நிலையில் மாவோயிஸ்டுளுக்கு மத்திய அரசு தடை விதித்து, அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவோயிஸ்ட் கட்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.
இதன் மூலம் மாவோயிஸ்டுகளைக் கைது செய்ய அரசுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்படும். அவர்களின் அலுவலகங்களும் மூடி சீல் வைக்கப்படும்.
இடதுசாரிகள் எதிர்ப்பு..
மத்திய அரசின் இந்த முடிவுக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிபிஐ எம்.பி. குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், இதை நாங்கள் ஏற்க மாட்டோம். மாவோயிஸ்டுகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்து அவர்களை தடை செய்ததற்குப் பதில், அரசியல் ரீதியாக அவர்களுடன் மோதி வென்றிருக்க வேண்டும் என்றார் அவர்.
சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், இந்தப் பிரச்சினைய அரசியல் ரீதியாகத்தான் தீர்க்க வேண்டுமே தவிர தடையால் ஒரு பயனும் கிடையாது.
பல்வேறு அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரம் மக்களிடம் உள்ளது. இருப்பினும் அரசியல் கொள்கைகள் மூலமாகத்தான் எந்த அமைப்பையும் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை படையினரையும், போலீஸாரையும் வைத்து ஒடுக்க முயலக் கூடாது.
லால்கர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் காண வேண்டுமே தவிர பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் பிரச்சினை தீர்ந்து விடாது என்றார் அவர்.
மேற்கு வங்க அரசு கூட மாவோயிஸ்டுகளுக்குத் தடை விதிக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்த நிலையில் மத்திய அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கடன் சுமை டூ வங்கி இருப்பு! 12 வருடத்தில் விவசாயிகளின் தலையெழுத்தை மாற்றிய கிசான் சம்ரித்தி திட்டம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications