ராஜினாமாவை வாபஸ் பெற்றார் சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: கட்சியின் பொது குழுக் தனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததை அடுத்து அதை திரும்ப பெறுவதாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நோக்த்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி கடந்த 2001ல் துவக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தெலுங்கானா கட்சி திடீரென பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று, ஏமாற்றம் அளித்தது.
இந்நிலையில் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம், தேர்தல் தோல்வி காரணமாக நேற்று முன்தினம் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து நேற்று கட்சியின் பொது செயலாளர் விஜயசாந்தியும் பதவி விலகினார்.
இந்நிலையில் நேற்று கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது சந்திரசேகர ராவின் ராஜினாமாவை ஏற்க பொதுக்குழு மறுத்துவிட்டது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தெலுங்கானா பொதுக்குழு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனது ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொண்டர்கள் சிலர் உண்ணாவிரதம் இருந்தனர்.
எனவே தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும், தனி தெலுங்கானா கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தவும் எனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என்றார் சந்திரசேகர ராவ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications