வட கிழக்கிலிருந்து இலங்கை படைகள் வாபஸ்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குவிக்கப்பட்டிருந்த பெருமளவிலான படைளை இலங்கை ராணுவம் திரும்பப் பெற்றுள்ளது. ரிசர்வ் படைகளை மட்டும் தற்போது அங்கு நிறுத்தி வைத்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது ஐந்து படைப் பிரிவுகளின் கீழ் படை வீரர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குவித்திருந்தது இலங்கை ராணுவம்.
தற்போது புலிகளுக்கு எதிரான போர் ஓய்ந்துள்ளதைத் தொடர்ந்து பெரும்பாலான படை வீரர்களை திரும்பப் பெற்றுள்ளது.
புலிகளின் முன்னாள் தலைநகரான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இரு படைப் பிரிவு தலைமையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு வேளை விடுதலைப் புலிகள் மீண்டும் இப்பகுதிகளில் தலையெடுத்தால் சமாளிப்பதற்காக இந்த படைப் பிரிவு தலைமையகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட வடக்கு குடாப் பகுதியில், ராணுவத்தின் 51, 52 மற்றும் 7வது அதிரடிப்படை ஆகியவற்றின் செயல்பாடுகள் இருக்கும்.
யாழ் குடா படைப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் மென்டக சமரசிங்கே, 55வது பிரிவின் தலைவராகவும் செயல்படுவார். இந்தப் பிரிவு, முல்லைத்தீவின் சாலை பகுதியிலிருந்து ரிசர்வ் படையாக செயல்படும்.
யானை இறவைப் பாதுகாக்கும் பொறுப்பு 7வது அதிரடிப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள படைப் பிரிவு மிகவும் சிறிய அளவிலானது என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications