மகிந்திரா சத்யம்-புதிய சிஇஓ குர்னானி!
மும்பை: சத்யம் நிறுவனம், மஹிந்திரா சத்யம் ஆன பிறகு, அங்கு பெரிய அளவில் மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக சி.பி.குர்னானி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைமை நிதி அலுவலராக துர்க்கா ஷங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா குழுமம் அறிவித்துள்ளது.
இருவரும் உடனடியாக பொறுப்பேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய மோசடிகள் செய்து சத்யம் நிறுவனத்தை இந்த மோசமான நிலைக்குக் கொண்டு வந்த சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவுக்கு விசுவான ஆட்கள் அனைவரும் அந்நிறுவனத்திலிருந்து விலகுகிறார்கள் அல்லது விலக்கப்பட்டு வருகிறார்கள்.
ராமலிங்க ராஜு சிறைக்குப் போன பிறகு, நிறுவனத்தின் இடைக்காலப் பொறுப்பாளராகப் பதவி ஏற்ற ராம் மைனாம்பதி, இப்போது சத்யம் நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் டெக் மஹிந்திரா சத்யம் நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளார்.
அவருக்கு பதில் கேஷவ் பண்டா பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்பு மகிந்திரா அண்ட் மகிந்திராவில் பணியாற்றியவர்.
மற்ற முக்கிய பொறுப்புகள் பலவற்றுக்கும் மகிந்திரா நிறுவன ஊழ்யர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கு முன் சத்யம் நிறுவன சிஇஓவாக இருந்த ஏஸ் மூர்த்தி, இப்போது மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக சிபி குர்னானி பொறுப்பேற்றுள்ளார்.
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ரோஹித் காந்தி, இப்போது மஹிந்திரா சத்யம் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்ரிக்க பகுதி செயல்பாடுகளின் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகிந்திரா சத்யம் நிறுவன சர்வதேச மார்க்கெட்டிங் தலைமை அதிகாரியாக அசுல் கன்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் ஆதித்ய பிர்லா குழுமத்தில் பணியாற்றினார்.
மகிந்திரா சத்யம் தலைவர் பதவிக்கு வருவது யார் என்பது மட்டும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications