தயாநிதி மாறனின் 100 நாள் செயல் திட்டம்!

ஜவுளித்துறை அமைச்சகத்தின் அடுத்த 100 நாள் செயல் திட்டத்தை தயாநிதி இன்று வெளியி்ட்டார்.
அதில், நாடு முழுவதும் 1.5 லட்சம் நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அறிமுகப்படுத்தப்படும், 2 புதிய மாபெரும் ஜவுளி்ப் பூங்காங்கள் திறக்கப்படும், செயல்படாமல் உள்ள 7 என்.டி.பி.சி மில்களும் மீண்டும் செயலாக்கத்துக்குக் கொண்டு வரப்படும், 1.5 கைவினைக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்,
கைத்தறி, கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மின்னணு சந்தை முறைகள் பயன்படுத்தப்படும்,
50,000 நெசவாளர்களுக்கும்,1 லட்சம் கைவினைக் கலைஞர்களுக்கும் அவர்களது தொழிலில் நவீன பயிற்சி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தயாநிதி மாறன் கூறுகையில்,
விவசாயத்துறைக்கு அடுத்தபடியாக நாட்டில் அதிகபட்ச தொழிலாளர்களைக் கொண்ட துறை ஜவுளித்துறையாகும். நாட்டின் ஏற்றுமதியில் 13 சதவீத இந்தத் துறை மூலம் தான் நடக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 4 சதவீதம் இந்தத் துறை மூலமே நடக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications
