கர்நாடகம், பிகார், மபி ஆளுனர்கள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil

இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இன்று பிறப்பித்தார்.
அதன்படி, முன்னாள் சட்ட அமைச்சர் ஹெச்.ஆர் பரத்வாஜ் கர்நாடக மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை இந்தப் பதவியில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவவான ராமேஸ்வர் தாக்கூர் மத்தியப் பிரதேச ஆளுனராக மாற்றப்பட்டுள்ளார். இதுவரை மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்த பல்ராம் ஜாக்கர் நீக்கப்பட்டுள்ளார்.
பிகார் மாநில ஆளுனராக இருந்த ஆர்.எல்.பாட்டியா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அஸ்ஸாம் காங்கிரஸ் அமைச்சர் தேவானந்த் கோன்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications