4 கல்லூரிகளில் பி.இ. மாணவர் சேர்க்கைக்கு தடை

Subscribe to Oneindia Tamil

Ponmudi
சென்னை: போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினாலும் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும் சென்னையை அடுத்த அடையாளம்பட்டில் உள்ள பிஎம்ஆர் பொறியியல் கல்லூரி, வேலூரில் உள்ள ஜிஜிஆர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரத்தில் உள்ள விகேகே விஜயன் பொறியியல் கல்லூரியி ஆகியவற்றில் இந்த ஆண்டில் ஒரு பாடப் பிரிவில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் குறித்து குழு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாகவும், அதன் அறிக்கை வந்த பின் அந்தக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஏஐசிடிஇயிடம் பேசுவோம் என்றார்.

மேலும் தமிழரகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளி்ல் கூடுதலாக 1,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

நாளை பி.இ. தரவரிசை பட்டியல்:

இதற்கிடையே அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் பட்டப்படிப்பின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூலை 5ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது.

தர வரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. விண்ணபித்த அனைவருக்கும் பி.இ. சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+