கட்சி அலுவலக தாக்குதல்-சு.சாமி மனு தள்ளுபடி
மதுரை: ஜனதா கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை ஏற்கனவை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க துவங்கிவிட்டதால் அக்கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமியின் மனு தேவையில்லாதது என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பி.பி.குளத்தில் சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சில மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் இருந்து மதுரை உயர் நீதி மன்றக் கிளைக்கு மாற்றப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணியசாமி தரப்பில், வழக்கை சிபிசிஐடி மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பதில் மனுவில், இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுவிட்டது. தற்போது 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தது.
இதையடுத்து நீதிபதி ஜிஎம் அக்பர் அலி, இந்த மனு தேவையில்லாதது என்றும், அதை பைசல் செய்வதாகவும் தெரிவித்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications