முல்லை பெரியாறுக்கு பதில் புதிய அணை-கேரளம் தீவிரம்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணைக்கு (குமுளி-தேக்கடி அணை) பதிலாக புதிய அணை கட்டும் பணிகளுக்கான ஆய்வுப் பணிகள் தொடங்கிவிட்டதாக கேரள சட்டசபையில் அம் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் விவசாயத்துக்கு பெருமளவில் உதவி வரும் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ள நிலையி்ல, அதன் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு கோரியதை உச்ச நீதிமன்றம் ஏற்று உயரத்தை அதிகரி்க்க உத்தரவிட்டும் அதை கேரள அரசு மதிக்காமல் இருந்து வருகிறது.
இந் நிலையில் இந்த அணைக்குப் பதிலாக புதிய அணையைக் கட்டி நீர் முழுவதையும் தானே பயன்படுத்திக் கொள்ள கேரளம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சட்டசபையில் பிரேமச்சந்திரன் கூறுகையில்,
சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட, 112 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனமாக உள்ளது. ஆகவேதான் அந்த அணைக்கு பதில் புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கினோம்.
முதல் கட்டமாக ஆற்றில் 3 கிமீ தூரத்துக்கு ஆய்வு செய்து முடித்து விட்டோம். மீதமுள்ள 4 கிமீ தூரத்திலும் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒரு மாத காலத்துக்குள் இந்த ஆய்வு முடிந்து விடும்.
இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் இலாகாவின் அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும். அதற்காக அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளோம்.
முல்லைப் பெரியாறு அணையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க கேரள அரசுக்கு முழு உரிமை உண்டு. ஆனாலும் அப்படி செய்ய நாங்கள் விரும்பவில்லை. தமிழக அரசுடன் சுமுகமாகப் பேசி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவே கேரளா விரும்புகிறது.
அணை பலவீனமாக உள்ளதால் அதன் அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
இந்த அணையை ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு அது பாதுகாப்பாவே உள்ளதாகக் கூறியுள்ளது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில் தான் பொய்யான பீதியைக் கிளப்பி புதிய அணையைக் கட்டி தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை குறைக்க கேரளம் திட்டமிட்டுள்ளது.
சேட்டன்களா... சும்மாவா...!!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications