நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகள் விற்பனை-ஜெ கடும் கண்டனம்
சென்னை: லாபத்தில் இயங்கி வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதைக் கண்டித்து நாளை நெய்வேலியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இது குறித்து கோடநாட்டில் ஓய்வெடுத்தபடி அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2006ம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முடிவெடுத்தபோது, அதைக் கண்டித்து அதிமுக சார்பில் அறிக்கை வெளியிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதன் விளைவாக மத்திய அரசு அந்த முடிவை திரும்ப பெற்றது.
தற்போது 2009ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிந்து பதவி ஏற்ற ஒரு சில நாட்களிலேயே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பத்து விழுக்காடு பங்குகள் உட்பட, இந்தியாவில் உள்ள நிலக்கரி தொடர்பான 10 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது தவிர்க்க முடியாதது என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஏற்கனவே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 6.5 விழுக்காடு பங்குகள் விற்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 விழுக்காடு பங்குகளை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் லாபத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். 2008-2009ம் ஆண்டில் மட்டும் ரூ. 821 கோடி அளவுக்கு இந்த நிறுவனம் லாபம் ஈட்டியிருக்கிறது.
இப்படி லாபத்தில் இயங்கி கொண்டிருக்கின்ற, விவசாய உற்பத்திக்கும், தொழில் உற்பத்திக்கும் முதுகெலும்பாக விளங்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இதை கருத வேண்டி இருக்கிறது.
எனவே, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், இந்த முடிவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், தொழிலாளர்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக அரசை கண்டித்தும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் நாளை மாலை 5 மணி அளவில், நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ தலைமையிலும், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சம்பத் மற்றும் என்எல்சி அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கச் செயலாளர் ராம.உதயகுமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications