ஸ்ரீபெரும்புதூரில் இன்னொரு விமான நிலையம்!
சென்னை: ஸ்ரீபெரும்புதூரிலும் ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டசபையில் போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதில் அளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையி்ல், பயணிகள் போக்குவரத்து, சரக்கு இயக்கம் ஆகிய இரண்டிலும் சென்னை விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை விமான நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.1808 கோடி செலவிட இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே ரூ.127.06 கோடி மதிப்பீட்டில் 126 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி இந்திய ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. அங்கு விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர ஸ்ரீபெரும்புதூரில் மேலும் ஒரு புதிய விமான நிலையத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்றார் அமைச்சர் நேரு.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications