சாந்தோம் புனித தோமையார் ஆலயத்தில் கொள்ளை

இன்று காலை காவலாளி ரவிச்சந்திரன் ஆலயத்துக்குள் சென்றபோது மாதா சிலை அருகே இருந்த மர உண்டியல் உள்பட 4 உண்டியல்கள் மாயமாகி இருந்தன.
இது குறித்து பேராலய நிர்வாகிகள் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். துணை கமிஷனர் மெளரியா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
தேவாலயத்தின் பின் பகுதியில் உள்ள படிக்கட்டு வழியே முதல் மாடிக்கு சென்று போலீசார் பார்த்தபோது அங்கு 4 உண்டியல்களும் உடைக்கப்பட்டு கிடந்தன. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
உண்டியல்களை உடைக்க உதவிய இரும்பும் குழாயும் அருகே கிடந்தது.
முன்வாசலில் 2 காவலாளிகள், பின் வாசலில் 2 காவலாளிகள் என 24 மணி நேர பாதுகாப்பு கொண்ட இந்த தேவாலயத்தில் நள்ளிரவு 1 மணிக்கே முன் வாசல் மூடப்படுவது வழக்கம்.
காவலாளிகளுக்குத் தெரியாமல் சுற்றுச் சுவர் வழியாக ஏறிக் குதித்து இந்தக் கொள்ளையை மர்மக் கும்பல் அரங்கேற்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்த மாடியை யாரும் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேராலயம் முழுவதும் 52 சிறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் கொள்ளையர்கள் அதில் பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து அந்த ரெக்கார்டிங்குகளை போலீசார் வாங்கிச் சென்று விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications