கடும் வெயில் எதிரொலி - பஞ்சாபில் அலுவலக நேரங்கள் மாற்றியமைப்பு
சண்டிகர்: வரலாறு காணாத அளவுக்கு வெயில் கொளுத்தி வருவதால் பஞ்சாப் மாநில அரசு அலுவலக நேரங்களை மாற்றி அமைத்து அறிவித்துள்ளது.
வட மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. மேலும், மழையும் இல்லாததால் கடும் வறட்சி காணப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஒரு வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசு அலுவலக நேரங்களை மாற்றி அமைத்துள்ளது. திங்கள்கிழமை முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
அதன்படி காலை 7.30 மணிக்கு அலுவலகங்கள் தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும் என முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாதல் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது பஞ்சாபில் அலுவலக வேலை நேரம் காலை 9 மணிக்குத் தொடங்கி 5 மணிக்கு முடிவடைகிறது.
இந்த நேர மாற்றம் அரசு அலுவலகங்கள், வாரியங்கள், அரசு சார்ந்த அலுவலங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தும்.
இருப்பினும் சண்டிகரில் உள்ள அரசு அலுவலகங்களின் நேரங்களில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
அதேபோல அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்களில் ஏசி பயன்படுத்தக் கூடாது என்ற தடை உத்தரவையும் மறு உத்தரவு வரும் வரை அரசு நீட்டித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications