கிளிநொச்சியை மீட்ட ராணுவ தளபதிக்கு துணைத் தூதர் பதவி
கொழும்பு: விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகராக திகழ்ந்த கிளிநொச்சியை மீட்ட படைப் பிரிவின் தளபதியான ஜெகத் டயஸ், ஜெர்மனி நாட்டுக்கான இலங்கை துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து அந்த வெற்றிக்கு உதவிய ராணுவ அதிகாரிகளைக் கெளரவிக்கும் வேலையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது.
பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவின் யோசனைப்படியே இந்த வேலையில் அதிபர் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.
முதல் படியாக, கிளிநொச்சியை மீட்க உதவி 57வது ராணுவப் படைப் பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், ஜெர்மனி நாட்டுக்கான இலங்கை துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டயஸ் தலைமையிலான படைப் பிரிவு, மடுத் தேவாலாயம், கொக்குவல் நகரம், துணுக்காய், மல்லாவி, கிளிநொச்சி ஆகிய முக்கியப் பகுதிகளை மீட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல மேலும் சில ராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவிப் பரிசை அளிக்கவுள்ளார் ராஜபக்சே என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications