கொங்கு மண்டலத்தை புறக்கணித்தால் தனி மாநிலம் கேட்போம் - பெஸ்ட் ராமசாமி
கோவை: கொங்கு மண்டலம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், தனி கொங்கு மாநிலம் கோரிக்கையை முன் வைத்துப் போராடுவோம் என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை, கண்ணம்பாளையம் கிளை கொ.மு.க., சார்பில், லோக்சபா தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கொ.மு.க. மாநிலத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், கொ.மு.க. தனிப்பட்ட சமுதாய அமைப்பு அல்ல, கொங்கு மண்டலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு என்று துவங்கப்பட்ட அமைப்பு.
கோவை சுற்றுப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்கள் இப் பகுதியின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளன. கிடப்பில் போடப்பட்ட பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
சென்னையில் 32 புதிய மேம்பாலம், ஆகாய ரயில் திட்டம் 14 ஆயிரத்து200 கோடி ரூபாயில் அமைக்கப்படுகிறது. ஆனால், கொங்கு மண்டலத்துக்கு ரயில்வே மேம்பாலம் கூட, கேட்டுப் பெற முடியவில்லை.
நொய்யலைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை, சாயக் கழிவைக் கடலுக்குக் கொண்டு செல்லத் திட்டமிடவில்லை.
கூவம் ஆற்றை 130 கோடி ரூபாய் செலவிட்டு சுத்தம் செய்து, அங்கு படகு சவாரி விடுவதாக கூறுகின்றனர். ஆனால், அவிநாசி - அத்திக்கடவு திட்டம் 700 கோடி ரூபாய் செலவிட்டால் மக்கள் பயன் பெறுவார்கள். அதே போன்று ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் போன்ற திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
அயல்நாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லாத, சலுகைக் கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படுகின்றது. ஆனால், நமக்கு கோட்டா விதிக்கப்படுகிறது, அபராத கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதான் நம் நிலை. இதை மாற்றத்தான் கொ.மு.க. பாடுபடுகிறது.
வருங்காலத்தில், கொங்கு மண்டலத்தை அரசு தொடர்ந்து புறக்கணித்தால், கொங்கு மாநிலம் கேட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications