3 ஜி வசதி இருந்தும் முதல் தலைமுறையைக் கூட தாண்டாத பிஎஸ்என்எல்!
டெல்லி: 3ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான செல்போன் வசதியை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மிக மோசமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்களே இந்த நிறுவனத்துக்கு உள்ளதும், அடுத்து வரும் செப்டம்பருக்குள் தனது 3 ஜி சேவைக்கு 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனமே அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
3 ஜி எனப்படும் நவீன மொபைல் சேவைக்குள் நுழைந்துள்ளது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல். கடந்த பிப்ரவரியில் இந்த சேவை துவங்கப்பட்டது. 70 நகரங்களில் இந்த சேவை அளிக்கப்பட்டாலும், இதுவரை 9 ஆயிரம் சந்தாதாரர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் (அந்த லட்சணத்தில் இருக்கிறது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மற்றும் விளம்பரம்!)
இதுவே தனியார் துறையாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் பாதியை ஏலத்தில் விட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு நவீன வசதி இருக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொள்கிறது பிஎஸ்என்எல்!
இப்போது இந்த 3 ஜி வசதியை 1000 நகரங்களுக்கு விரிவுபடுத்தப் போகிறதாம் பிஎஸ்என்எல். இந்த ஆயிரம் நகரங்களுக்கும் சேர்த்து 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டும் அடுத்த 3 மாதங்களுக்குள் சேர்க்கப்போகிறார்களாம் (இலக்கைக் கூட உயர்ந்த அளவு நிர்ணயிக்கிறார்களா பாருங்கள்!).
"அதாவது இவர்களின் டார்கெட் சராசரியாக ஒரு நகரத்துக்கு 100 வாடிக்கையாளர்கள். அவ்வளவுதான். மற்ற வாடிக்கையாளர்களை பகிரங்கமாக தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம்", என்கிறார் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒரு 'நல்லவர்'.
3ஜி சேவையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் மொபைலில் பெற முடியும். குறிப்பாக, வீடியோ சாட்டிங், கேம்ஸ், அதிவேக இன்டர்நெட் வசதி, தொலைக்காட்சி பார்க்கும் வசதி... இப்படி எல்லாமே உண்டு. இதை முறைப்படி விளம்பரப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்தால், இந்தியாவில் பல கோடி சந்தாரர்கள் பிஎஸ்என்எல்லைத் தேடி வருவார்கள்.
ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர்களோ, விவரம் கேட்டு வருபவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக விவரக் குறிப்புகளைக் கூட சொல்ல ஆளில்லை, வாடிக்கையாளர் பிரிவுகளில்.
இல்லாவிட்டால் 70 நகரங்களில் கடந்த 4 மாதங்களில் வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை இவ்வளவு பகிரங்கமாக கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி சொல்வாரா, பிஎஸ்என்எல் சேர்மன் குல்தீப் கோயல்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications